/Departments / General and Laparoscopic Surgery
Laparoscopic general surgery from basic to advanced, Laparoscopic hernia repair, Laparoscopic Oncology surgery, Laparoscopic Gynecology, Llaparoscopy for acute abdomen such as duodenal perforation are routinely done in Karthic medical centre.
Beginning with standard definition units and bipolar energy sources which later were updated with high definition video system, advanced energy such as harmonic scalpel, vessel sealer, hi flow insufflator, advanced underwater bipolar capable diathermy, ETCO2 monitor and advanced workstation.
On the diagnostic Endoscopy side, We in KMC have OGD scopy, Colonoscopy, Hysteroscopy, units to perform accurate diagnostic service for the early diagnosis and management of malignancy and serious benign problems.
We strive to accommodate highly precise imported laparoscopy and endoscopy instruments though expensive to give best results for the patients
எண்டோஸ்கோபி பரிசோதனை என்றால் என்ன?
விடியோ எண்டோஸ்கோபி கருவி கொண்டு தொண்டை, குரல்நான், இறைப்பை, உணவுக்குழாய், முன்குடல் பரிசோதனை செய்யப்படுகிறது
என்டோஸ்கோபியின் தேவை
Isolated Dyspagia and/or Odynophagia ( உணவு விழுங்குவதில் சிரமம் மற்றும் வலி )
Dyspepsia ( அஜிரணம் )
Peptic Ulcer(வயிற்றில் தொடர்ந்து உண்டாகும் வலி )
Persistent Isolated Nausea or Vomiting (வாந்தி மற்றும் குமட்டல்)
Acute GI Bleeding Orginating in the Upper GI Tract ( இரத்த வாந்தி )
Gastro Oesophageal Reflux ( நெஞ்சு கரிப்பு, எரிச்சல் )
Portal Hypertension ( கல்லீரல் நோயினால் உணவுக்குழாயில் ஏற்படும் இரத்தக் குழாய் வீக்கம் - OESOPHAGEAL VARICES ) கண்டறிய
Barretts Oesophagus ( உணவுக்குழாயில் ஏற்படும் ஆரம்பநிலை புற்றுநோய் )
அல்சர் என்பது என்ன?
தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை பொதுவாக பெப்டிக் அல்சர் ( Peptic Ulcer ) என்கிறோம்.
காரணங்கள்
காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு மற்றும் எண்ணெயில் பொரித்த உணவை அதிகமாக சாப்பிடுவது
மது அருந்துதல், புகைப்பிடித்தல், கோலா, காபி மற்றும் தேநீர் பானங்களை அதிகமாக குடிப்பது
ஸ்டீராய்டு மாத்திரைகள் மற்றும் ஆஸ்பிரின், புரூஃபென் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை (Steriod and NSAID) மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது
மணக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கம்மின்மை போன்ற காரணிகளும் இரைப்பை புண் வருவதைத் தூண்டுகின்றன ( Stress induced Gastritis )
சுகாதாரமற்ற குடிநீர், கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சுழல் போன்ற காரணங்களால் ஹெலிக்கோபாக்டர் (Heliocobacter Pylori) பைலோரி எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து புண்களை உண்டாக்குகிறது
காரணங்கள்
இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான் இதைத் தொடர்ந்து அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும், பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவைச் சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும், பிறகு வயிற்றில் வலி தோன்றும், குமட்டலும், வாந்தியும் வரும்.
பாதிப்புகள் என்ன?
இரைப்பைப் புண் தொடர்ந்து இருந்தால், அது புற்றுநோயாக மாறுவதற்கு அதிக வாய்புண்டு அதிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வாய்ப்பு சற்று அதிகம். புண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்த வாந்தி (Haematemesis ) வரலாம். இரைப்பையில் இல்லாமல் முன்சிறு குடலில் புண் இருந்தால் குடல் அடைப்பு (Obstruction) ஏற்படலாம். சில சமயங்களில் அல்சர் பகுதியில் குடலில் துளை விழுவதற்கான (Perforation) வாய்ப்பும் உள்ளது.
"ஆகவே சரியான உணவு முறையை மேற்கொள்வோம் வரும் முன் காப்போம்"
"மேலும் மருத்துவர் ஆலோசனையுடன் சரியான பரிசோதனைகளை மேற்கொள்வோம்"
Dr . பிரவின் சந்திரன் M.S.,FIAGES.,FALS.,
பொது மற்றும் லெப்ரோசக்கொப்பி அறுவை சிகிச்சை நிபுணர், எண்டோஸ்கோபி பரிசோதனையாளர் (இரைப்பை மற்றும் பெருங்குடல் )